இசையமைப்பாளர் கலாபூஷணம் M.S.செல்வராஜா மாஸ்டர் காலமானார்.

இலங்கையின் தமிழ், சிங்கள மெல்லிசை, சாய் பஜன், பொப்பிசை, திரையிசைப் பாடகரும், இசை ஆசிரியருமான இசையமைப்பாளர் கலாபூஷணம் ஆ.ளு.செல்வராஜா மாஸ்டர்  (வயது – 85)   காலமானார்.

நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று தொடக்கம் எதிர்வரும் 7 திகதி வரை கொழும்பு பொரள்ளை ஜெயரட்ன மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இறுதி ஊர்வலம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்