-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் அம்பன் குடத்தனையைச் சேர்ந்த குணசெல்வம் நிரோஜன் (31 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது கம்பம் ஒன்றில் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும், குறித்த விபத்திலேயே இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், இளைஞனின் சடலம் தற்போது ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
