கல்முனை மட்டக்களப்பு வீதியில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கும் விடயம் தொடர்பில் எமது ஊடகத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டது.
அதன்மூலம் குறித்த விடயம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பேருந்தில் உடைந்து கிடந்த கம்பிகள் மற்றும் கைபிடிகள் சரி செய்யப்பட்டுள்ளன.
குறித்த பேருந்தானது கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் காலை வேளையில் பயணிக்கிறது. இதில் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் பயணிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த பேருந்து தொடர்பாக சுட்டிக் காட்டப்பட்ட பிரச்சினையை சரி செய்தமைக்கு சாலை முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோருக்கு பயணிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் காலை வேளையில் பயணிக்கும் மிக முக்கிய பேருந்துகளில் ஒன்றான இந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி உரிய நேரத்தில் உரிய இடங்களில் இறக்கி விட்டு தமது வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர்.
எனவே இந்த பேருந்தில் இருக்கும் ஏனைய குறைபாடுகளையும் ஆபத்தான் நிலைமைகளையும் சரி செய்ய வேண்டிய கடமை சம்மநதப்பட்ட அதிகாரிகளுக்கு இருக்கிறது.
அரச சேவைகளை நம்பி அரச பேருந்தில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.