2026 நவம்பர் இடைத்தேர்தலுக்கு முன், அஞ்சல் வாக்குகளை (mail-in ballots) கட்டுப்படுத்தும் புதிய USPS (அமெரிக்க அஞ்சல் சேவை) விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த அனுமதி கோரி, டிரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தை அவசர முறையீட்டின் மூலம் அணுகியது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அஞ்சல் வாக்குச் சீட்டிலும் தனிப்பட்ட பார்கோடுடன் வாக்காளரின் பெயர், முகவரி போன்ற அடிப்படை தகவல்களை மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும்; அரசு வழங்கிய பட்டியலில் இல்லாத வாக்காளர்களுக்கு அஞ்சல்காரர்கள் வாக்குச் சீட்டுகளை வழங்க மாட்டார்கள்.
இது “மாநிலங்களின் தேர்தல் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதாக” விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போஸ்டனில் உள்ள கூட்டாட்சி நீதிபதி இந்திரா தல்வானி பிறப்பித்த தற்காலிக தடை உத்தரவு செப்டம்பர் 10ல் முடிவடையவுள்ளது; ஆனால் அது நீட்டிக்கப்படலாம்.
“இது மாநிலங்களின் தேர்தல் நிர்வாகத்தை கைப்பற்றவில்லை, தபால் தொடர்பான நியாயமான தயார்நிலை தேவைகளை மட்டுமே விதிக்கிறது” என சொலிசிட்டர் ஜெனரல் ஜான் சாயர் நீதிமன்ற மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 24ல் ஏற்கனவே 6-3 என்ற பெரும்பான்மையில் (தாராளவாத நீதிபதிகள் எதிர்ப்பு), டிரம்பின் நிர்வாக உத்தரவின் சில பகுதிகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.
இதை எதிர்த்து கலிபோர்னியா தலைமையிலான 23 மாநிலங்களும், வாஷிங்டன் DC-யும் வழக்குத் தொடர்ந்துள்ளன; “இவ்வளவு பெரிய மாற்றங்களை தேர்தலுக்கு சற்று முன்பே அமல்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், வாக்காளர்களின் உரிமையை பறிக்கும்” என மாநிலங்கள் எச்சரிக்கை.
செப்டம்பர் 8ஆம் திகதி காலை 10 மணிக்குப் பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.










