மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு எமது பிரதேச சபை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்காது என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கொட்டகலை லொக்ஹில் தோட்டத்தில் மர ஆலை அமைப்பதற்கு கடந்த வாரம் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவ்வாறு ஆலை ஒன்றை அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதி எதனையும் வழங்கியிருக்கவில்லை.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மக்கள் வாக்களித்து பிரதேச சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யபப்ட்டுள்ளார்கள்.










