அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று வெள்ளிக்கிழமை முதல் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு  325 ரூபாவினால் குறைக்கப்பட்டு  ஆயிரத்து 225 ரூபா.

ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய்  60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபா.

பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு  299 ரூபா.

சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும்  நெத்தலி கிலோ ஒன்றின் விலை 1,140 ரூபாவாகவும்  ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 200 ரூபாவாகவும் குறைக்கப்பட உள்ளன.

சோயா மீட் கிலோ ஒன்றின் விலை 650 ரூபாவாகவும், சிவப்பு அரிசி கிலோ ஒன்றின் விலை 139 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 540 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்