வற் அதிகரிப்பால், பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 50 ரூபாவால் அதிகரித்து 350 ரூபாவாகவும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வற் என்ற போர்வையில் சில வர்த்தகர்கள் கட்டுப்பாடற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.