
அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,625.88 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 792.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்