வைத்தியர் ஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு நிராகரிப்பு

தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

குருணாகல் காவல்துறை உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்