வைத்தியசாலை வார்டினுள் நுழைந்து கத்திகுத்து : இளைஞர் உயிரிழப்பு

வாள்வெட்டுக்கு இலக்காகி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்து குறித்த நபர், நேற்று முன்தினம் மாலை குழுவொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் குறித்த நபர் கழுத்து மற்றும் காலில் கத்தியால் குத்தப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்,  ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்