வேறு பெண்களை பார்த்த காதலன்: கண்ணை வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய காதலி
அமெரிக்காவில் மற்ற பெண்களை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர்இ ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்தியுள்ளார்.
அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டி பகுதியை சேர்ந்த சந்த்ரா ஜிமினெஸ் (வயது – 44) என்ற பெண்ணே இவ்வாறு தனது ஆண் நண்பரை தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண் தனது ஆண் நண்பருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். இதன்போது தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) ஆண் நண்பர் வீட்டில் வாங்கி வைத்துள்ளார். இந்த நிலையில் குறித்த நபர் மற்ற பெண்களை பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்து ஒரு ஊசியை எடுத்து ஆண் நண்பரின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காயம் அடைந்த அந்த நபர் பொலிஸாரிடம் தொலைபேசி மூலம் உதவி கேட்டதையடுத்து பொலிஸார் அவர்களது வீட்டிற்கு சென்று, ஆண் நண்பரை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்துள்ளனர்.
விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், ஆண் நண்பர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்