வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடையினுள் புகுந்த பிக்கப்
-கிளிநொச்சி நிருபர்-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகர பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் ஒன்று கடைத்தொகுதியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
பளை நகரப்பகுதியில் ஏ9வீதியில் கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்து ஒன்று பளை பேரூந்து தரிப்பிடத்திற்கு திரும்பியுள்ளது.
இதனை அவதானிக்காமல் யாழ் நோக்கி வந்த பிக்கப் வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்து பளை நகரப்பகுதியில் அமைந்துள்ள புத்தக கடை ஒன்றினை உடைத்து உட்சென்றுள்ளது.
குறித்த விபத்தில் கடைத்தொகுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்தது.
விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.