வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு நபரொருவர் இலக்காகியுள்ளார்.

நேற்று செவ்வாய்  இரவு குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், வெளிநாட்டவர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்