வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது லொறி மோதி விபத்து

-பதுளை நிருபர்-

பதுளை மஹியங்கனை வீதியில் 20 ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 20 ம் கட்டை பகுதியில், வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது மஹியங்கனையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பூம் லொறி (பாரந்தூக்கும் லொறி) மோதியது.

இதன்போது, படுகாயம் அடைந்த குறித்த பெண், மஹியங்கனை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரமிட மீகாகியூல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இதன்போது பூம் ரக லொறியின் ( பாரந்தூக்கும் லொறி) சாரதியான உலபத்வெவ இங்குருகத்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கந்தகெடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்