வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இரு இளம் வயதினர் பலி
கண்டி- துனுவில பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக வீட்டின் மீது பாரிய கல் ஒன்றும், மண்மேடு சரிந்து விழுந்ததில் பதினெட்டு வயது சிறுமியும் 16 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த மூன்று பிள்ளைகளும் அவர்களது தந்தை மற்றும் தாயும் மீட்கப்பட்டு ஜம்புகஸ் பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் சிறுவனும் சிறுமியும் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்