விவசாயிகளுக்கான பசளை வழங்கி வைப்பு

-கிண்ணியாநிருபர்-

திருகோணமலை – முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்தின் ஊடாக USAID அனுசரணையுடன் விவசாயிகளுக்கு TSP அடிக்கட்டு பசளை வழங்கப்பட்டது.

முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட முதலாம் வாய்க்கால், இரண்டாம் வாய்க்கால்,  மூன்றாம் வாய்க்கால், ,நான்காம் வாய்க்கால் முதலான பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இப்பகுதியில் சுமார் 685 ஏக்கர் நிலப் பரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒன்பது கிலோவும், நீர்ப்பாய்ச்சல் காணிக்கு ஒரு ஏக்கருக்கு 14 கிலோவும் என்ற வகையில் அடிக்கட்டு பசளை விநியோகிக்கப்பட்டன.

எனினும் இவைகள் போதாது என்றும் இன்னும் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்