விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்

இலங்கையில் சிறுபோகத்தில் பயன்படுத்தப்படாத வவுச்சர்களை பெருபோகத்தின் போது பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படித் தகவலை  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த  அமரவீர  தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்