விபத்தில் பொலிஸ் சார்ஜன் உட்பட மூவர் பலி

-பதுளை நிருபர்-

வெல்லவாய தனமல்வில வீதியில் யாழபோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த தனமல்வில பொலிஸ் நிலைய சார்ஜன் உட்பட அவரது தந்தை மற்றும் அவரது மனைவி ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அத்தோடு 11வயதுடைய சிறுவன் பலத்த காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

கெப் ரக வாகனத்தின் சாரதி உட்பட மூவர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலமும் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்