வாகன விபத்து: வைத்தியர் உட்பட இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வைத்தியர் மற்றுமொரு நபருடன் யாழ்ப்பாண நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​கல்லூண்டாய் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், வைத்தியரின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியரும் அவரது நண்பரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்