வாகன விபத்து: இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி – நாவற்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் (வயது – 22) என்ற இளைஞரே உயிரிழந்தார்.

விற்பனை நிறுவன வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்