வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படும்

வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால சூழல் இனியொருபோதும் தோற்றம் பெறாது என்றும் 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேசமயம் சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்