![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/IMG_20241109_202849-2.jpg)
வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
வவுனியாவில் ஒருதொகை போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் வவுனியா பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்