
வயது மூத்த பெண்களின் மீது மையல் கொள்ளும் ஆண்கள்
எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை. சில ஆண்களுக்கு தன்னைவிட வயது குறைந்த பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு தன்னையொத்த வயதுடைய பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு தன்னைவிட வயதில் மூத்த பெண்களை பிடிக்கும். இப்படி ஒவ்வொரு ஆணுக்கும் தனித்தனி ரசனை உண்டு.
😎தன்னம்பிக்கை கொண்ட ஆண்கள்:
தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருக்கும் ஆண்கள் வயது மூத்த பெண்களின் மீது காதல் கொள்வார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்இதனை இயல்பாகவே எடுத்துக் கொள்வார்கள்.. தங்களுடைய விருப்பங்களுக்கு தயங்காமல் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
😎வெளிப்படையாக பேசும் ஆண்கள் :
எல்லாவற்றை வெளிப்படையா பேசும் ஆண்கள் பெரும்பாலும் வயது மூத்த பெண்களை விரும்புவார்கள். புதிய அனுபவங்கள் அவர்களுக்கு எப்போதும் தேவையாக இருக்கும்.பிறரிடம் இருந்து கற்றுக் கொள்வதை உயர்வாக கருதுவார்கள்; தாழ்வு மனப்பான்மை இவர்களுக்கு இருக்காது.பெண்கள் தங்களுடைய கண்ணோட்டத்தில் சொல்லும் விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சி எடுப்பார்கள். பெண்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள்.
😎மரியாதையுணர்வுள்ள ஆண்கள்:
எல்லா உறவிலும் மரியாதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நமக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ அனைவரையும் மதிக்க வேண்டியது அடிப்படையான விஷயம். பெரும்பாலும் தன்னைவிட வயதில் மூத்த பெண்கள் மீது விருப்பம் கொண்டிருக்கும் ஆண்கள் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள் பிறரிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் சமயத்தில் அதனை வேரிலிருந்து புரிந்து கொண்டு முடிவுகளை நிதானமாக எடுப்பார்கள். இருவருக்கிடையிலும் ஏதேனும் மனஸ்தாபம், கோபம் இருந்தால் அதனை பக்குவமாகப் பேசி சரி செய்ய முயற்சி செய்வார்கள்
😎சுதந்திரமான ஆண்கள் :
சுதந்திரமாக வாழ விரும்பும் ஆண்களுக்கு வயது மூத்த பெண்கள் மீது காதல் வருகிறது. இவர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள். தனக்கு விருப்பமான செயல்களை செய்ய தவறமாட்டார்கள். சூழலுக்கு ஏற்றமாதிரி மாறிவிடுவார்கள். இந்த பண்புள்ள ஆண்கள் தன்னை போல சுதந்திரமாக வாழும் வயது மூத்த பெண்களை விரும்புவார்கள்.
😎புத்திசாலித்தனமான ஆண்கள்:
உறவில் ஏற்படும் சிக்கலான விஷயங்களை சுமூகமாக தீர்க்கும் ஆற்றல் உள்ள ஆண்கள் வயது மூத்தப் பெண்களை தான் விரும்புவார்கள். பிறர் சில விஷயங்களை உணர்வுப் பூர்வமாக அணுகாவிட்டாலும் அவர்களுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் இவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
💞சில ஆண்கள் பக்குவமான பெண்களை விரும்புவார்கள்.சில ஆண்கள் தனக்கு சமமான வயது அல்லது தன்னை விட வயது அதிகமுள்ள பெண்கள் தான் விரும்புவார்கள். தனிச்சையாக செயல்படுவது, பக்குவமான பேச்சு, சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது போன்றவை வயது மூத்த பெண்களை ஆண்களுக்கு பிடிக்கச் செய்கிறது.
💞வயது மூத்த பெண்கள் எல்லா விஷயத்திற்கும் ஆண்களை சார்ந்து இருக்கமாட்டார்கள். சிக்கலான சூழ்நிலைகளை அவர்களே சமாளிக்கிறார்கள். ஆனால் எல்லா ஆண்களுமே இந்த மாதிரி எதிர்பார்ப்பதில்லை. சில பண்புள்ள ஆண்களே வயது மூத்த பெண்களிடம் காதல் கொள்கிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்