வன்னியில் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்தது ஜனசெத பெரமுன

-வவுனியா நிருபர்-

வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலாவது வேட்புமனுவை ஜனசெத பெரமுன கட்சி தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெதபெரமுன தனது வேட்புமனுவினை இன்று (04.10) தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மற்றும் ஆதரவாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்