ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் பிரவேசித்த இலங்கையர்கள்

காஸா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் பிரவேசித்த 15 இலங்கையர்கள்  இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலையடுத்து, அங்குள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு தேவையான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி காஸா பகுதியில் சிக்கியிருந்த 4 இலங்கையர்கள் முதற்கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்