யோஷித ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் !

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சன்ஜீவனி முன்னிலையில், பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான்ma உத்தரவிட்டார்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளமைக்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டமைக்கு அமையவே யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதறகமைய, இன்று காலை பெலியத்தையில் கைது செய்யப்பட்ட அவர் சனிக்கிழமை பிற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் அவரிடம் பலமணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க