மைத்துனரின் தலையில் கட்டையால் தாக்கிய நபர் கைது

-பதுளை நிருபர்-

வெளிமடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமார புரம் வெளிமடை தோட்ட பகுதிக்கு கடந்த 22 ம் திகதி கருமக்கிரியை வீடொன்றுக்கு நுவரெலியா பகுதியில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கும் குறித்த நபரின் மைத்துனருக்கும் இடையில் பணம் சம்பந்தமான வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நுவரெலியா பகுதியில் இருந்து வருகை தந்த நபர் தனது மைத்துனரின் தலையில் கட்டையால் தாக்கியதில் 49 வயதுடைய குமாரபுறம் வெளிமடை பகுதியை சேர்ந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் வெளிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைக் தொடர்ந்து கட்டையால் தாக்கிய சந்தேகத்தின் 55 வயதுடைய நுவரெலியா பகுதியை சேர்ந்த நபர் வெளிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்