மற்றுமொரு தாயும் 8 மாத குழந்தையும் காணவில்லை

நாட்டில் மேலும் ஒரு தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹங்குரான்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8 மாதாங்களுமான பெண் குழந்தையும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த இருவரும் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அந்த பெண்ணின் தாயார் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இருவரும் காணாமல் போன தினத்தன்று பேருந்தில் ஹங்குரான்கெத்த, ரிக்கிலகஸ்கட நகரிற்கு சென்றுள்ளதாகவும் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹங்குரான்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை ஹங்குரான்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்