மூதூரில் சுனாமி நினைவுத் தூபி திறந்துவைப்பு

-கிண்ணியா நிருபர்-

20 ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் மூதூர் இறங்குதுறைமுக வாசலில் சுனாமி நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் 2004.12.26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலையினால் மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மரணித்த ஆத்மாக்களுக்கான நினைவஞ்சலியும் மற்றும் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. மேலும் இரத்ததான முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி நினைவு தினத்தில் முதன்மை அழைப்பாளராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்ததோடு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன்,அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் ,சமூக நிறுவன உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்