முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவு
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிக்காக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய சகல இராணுவ அதிகாரிகளையும், அடுத்த வாரம் முதல் நீக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 11 மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்