முட்டை விலையை குறைக்க தீர்மானம்
உள்ளூர் முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கும் குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரித்து, அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்