இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி இல்லை

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி இல்லை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார்.

அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  இன்று நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் உள்ள முட்டைகளுக்கான அனுமதியை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் பெற வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அந்த முட்டைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் நாளை வியாழக்கிழமை ஒப்படைக்கவுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்