முகத்தை சைட் எபக்ட் இல்லாமல் இயற்கையாக பொலிவாக்க வேண்டுமா?

அனைவருக்கும் தாங்கள் அழகாக இருப்பது செல்ப் கான்பிடன்ஸாக உணர்கிரார்கள் அதற்காக………..

🎀 சிலர் இரசாயன க்றீம்களை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அதன் காரணமாக முகத்தில் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை அவர்கள் அறிவதில்லை.

🎀 இன்னும் சிலர் உடற்பயிற்சி, யோகா மற்றும் நீச்சல் செய்வதன் மூலம் தனது உடலில் உள்ள அழுக்குகளை வியர்வை மூலமாக நீக்கி முகத்தையும் பொலிவாக வைத்திருப்பார்கள்.

🎀 இன்னும் சிலர் எவ்வாறு தனது முகத்தை பொலிவுபெற செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.

அவ்வாறானவர்களுக்காக வீட்டில் இருக்கும், சமையலுக்கு உதவும் கடுகை வைத்து எப்படி முகத்தை அழகாக காண்பிக்கலாம் என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

💠கடுகு – 02 தே.கரண்டி

💠பால் – 1/4 கப்

💠தேன் – 1/2 தே.கரண்டி

💠மஞ்சள் – 01 சிட்டிகை

செய்முறை

◾பாலுடன் கடுகை சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து, பின் மிக்ஸியில் இட்டு அரைத்த எடுத்துக் கொள்ள வேண்டும்.

◾பின் அதனுடன் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

◽இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

◽பின் சூடான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்