மின்சாரக் கட்டணம் கூடிய விரைவில் சுமார் 50% குறைக்கப்படும்

கடந்த ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணமானது கூடிய விரைவில் சுமார் 50% குறைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர் மின் உற்பத்தியின் இலாபத்தை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கை மின்சார சபை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்