மிக்ஜாம் புயலின் வேகம் அதிகரிப்பு

மிக்ஜாம் புயல் நாளை செவ்வாய் கிழமை முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலின் அறிகுறிகள் தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை முதல் தென்பட ஆரம்பித்து.

இந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்