மானியம் கிடைக்கபெறவில்லை: விவசாயிகள் கவலை
மூதூர் – தோப்பூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இம்முறை பெய்த மழையினை நம்பி விதைக்கப்பட்ட நெற்செய்கை சிறப்பான முறையில் வெற்றியளித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
நெற்செய்கைக்கு புதிய அரசாங்கத்தினால் வழங்குவதாக வாக்களித்த ஹெக்டேயருக்கு 25000 ரூபா மானியம் இதுவரையில் கிடைக்கப்பெறாததால் கடன் அடிப்படையிலேயே உரம் மற்றும் கிருமிநாசினிகள் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இதனால் கடை உரிமையாளர்கள் கழிவுத்தொகையின்றி இப்பொருட்களை தருவதனால் பாதிப்படைவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த மானியத்தினை விரைவில் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்