
மாத்தறை சிறைச்சாலையில்; குழப்பநிலை : வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம்
மாத்தறை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் பல கைதிகளை வேறு சிறைக் கூடத்திற்கு மாற்ற முயன்றபோது இன்று செவ்வாய்க்கிழமை மாலை பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை வட்டாரங்களின்படி, சக கைதிகளை மாற்றுவதற்கு கைதிகள் ஒரு குழு எதிர்ப்பு தெரிவித்ததால் அமைதியின்மை தொடங்கியது. ஒரு கூடாரத்தை சேர்ந்த கைதிகள் வெளியேறி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவும், வேறு சில கைதிகளுடன் மோதவும் தொடங்கியதால் நிலைமை மோசமடைந்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர். நிலைமை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ,சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மேலும் குழப்ப நிலையை தடுப்பதற்கும் சிறப்பு அதிரடிப் படை மற்றும் பொலிசார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்