மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பொலிஸாரிடம் சரணடைந்த மாணவன்!

கெக்கிராவை ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பதினைந்து வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் பதினாறு வயது மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகாயப்படுத்தியதையடுத்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளான்.

தாக்குதலில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியே அவரது வீட்டுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாணவியை தாக்கியதாக கூறப்படும் மாணவன் மாணவியை தாக்க பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியுடன் ரணஜயபுர பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்