மாணவியின் கை நகத்தை உடைத்த ஆசிரியர்: சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நகம்

-யாழ் நிருபர்-

யாழ் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்பிக்கும் மாணவி மீது குறித்த ஆசிரியர் தாக்கியதில் மாணவியின் கை நகம் சிதைவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

குறித்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்வதற்கான குழு அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்