மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது

அனுராதபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 38 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அனுராதபுரம் முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்