மரதன் ஓட்ட வீரர் தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் சில தரப்பினரிடம் நீண்டகாலமாக முரண்பாட்டில் இருந்ததாகவும் முரண்பாடு அதிகரித்ததன் காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்