மயில்கள் மற்றும் காட்டு யானைகளையும் ஏற்றுமதி செய்ய வேண்டும்

முடிந்தால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மயில்கள் மற்றும் காட்டு யானைகள் போன்றவற்றையும் பயிர் சேதத்தை தடுக்க ஏற்றுமதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிராக குரல் எழுப்பும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறு செயற்படுகின்றனர்.

மேலும், வெறிநாய் பிடிப்பதற்காக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடிய சிறப்பு வகை கூண்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெறிநாய் பிடிக்கும் நபர்களுக்கு அந்த கூண்டுகளை பயன்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்