மன்னார் துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய இருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க