மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம் : 5 பேரிடம் வாக்குமூலம்
மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம்
இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 5 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவியுடன் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐம்பது இலட்சம் ரூபா பணத்தை யாரேனும் திருடிச் சென்றுள்ளார்களா அல்லது கணக்குப்பதிவில் குறைபாடு உள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைக்கு தலைமை தாங்கும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் மத்திய வங்கியும் நேற்று புதன் கிழமை உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்