மதிய வேளையில் பின்பற்ற நல்ல பழக்கவழக்கங்கள்…

நாம் அனைவரும் எப்போதும் காலை வேளையையும் இரவு வேளையையும் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் மதிய வேளையில் என்ன செய்கிறோம் என என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அது நம் ஆயுளில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியுமா? நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால், பெரும்பாலும் மதியம் வரை பரபரப்பாகவே இருப்பீர்கள். மாலைக்குள் வேலையை முடிக்க வேண்டும் என மும்முரமாக இருப்பீர்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தமும், மதிய சாப்பாட்டிற்கும் பிறகு வரும் சிறு மந்தமும் நம்மை பலவீனப்படுத்தும். சரி, நம் மதிய வேளையை எப்படி ஆரோக்கியமாக பயன்படுத்துவது?

உலகில் நீண்ட ஆயுட்களை கொண்டுள்ள மக்களின் பழக்க வழக்கத்தை நாமும் பின்பற்றினால் பல நன்மைகள் கிடைக்கும். பொதுவாக நீல மண்டலத்தில் வாழும் மக்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக ஆயுளோடு இருப்பதாக கூறப்படுகிறது.

உற்பத்தி திறனை விட அதன் நோக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் :
நீல மண்டலத்தில் வாழும் மக்கள் முழு நாளும் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை சீரமைப்பதில் நேரத்தை செலவழிக்கிறர்கள். இதனால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை இப்போதே நிறுத்துங்கள் என்று அர்த்தமில்லை. இருப்பினும், உங்கள் வாழ்கையில் தினசரி ஏற்படும் சிறு சிறு தடங்களுக்கு வருத்தப்படுவதற்குப் பதிலாக, சற்று நேரம் ஒதுக்கி, உங்களைச் சுற்றியுள்ள பல விஷயங்களுக்கு கவனம் கொடுங்கள். இது உங்களுக்கு தெளிவையும், மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுக்கும்.

மற்றவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிடுங்கள் :
உங்கள் மேஜையில் அமர்ந்து உணவு உண்டாலோ அல்லது மதிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தாலோ, உங்களால் கூடுதல் வேலையை முடிக்க முடியும். ஆனால் உண்மையில் உங்கள் மதிய வேளையை இப்படித்தான் செலவழிக்கப் போகிறீர்களா? மதிய சாப்பாடு நேரத்தை ஓய்வு வேளையாக கருதிக் கொள்ளுங்கள். சக பணியார்களோடு அமர்ந்து சாப்பிடுங்கள். வேலை தவிர்த்த மற்ற விஷயங்களை அவர்களோடு மனம் விட்டு பேசுங்கள். நீங்கள் புத்துணர்ச்சியாக இருக்கவும் மற்ற பணியாளர்களோடு நல்ல நட்புறவை பேணவும் மதிய நேர சாப்பாடு வேளை உதவிக்கரமாக இருக்கும்.

நடப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் :
நீல மண்டலத்தில் வாழும் மக்கள் நாள் முழுதும் நடப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் ஃபிட்னஸை இவர்கள் இந்தமுறையில் தான் அணுகுகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருந்துவிட்டு, பின்னர் ஒரு மணி நேரம் ஜிம்மில் கடுமையான பயிற்சியை மேற்கொள்பவர்கள் கிடையாது. பைக் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது, நடைப்பயிற்சி மேற்கொள்வது என எப்போதும் தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்கிறார்கள். மதிய நேரத்தில் எவ்வுளவு வேலைகள் இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு சற்று நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

மற்றவர்களோடு நட்புறவு கொள்ள நேரம் ஒதுக்குங்கள் :
அடுத்தவர்களோடு நட்புறவு கொள்வதன் மூலம் நம் ஆயுளை நீட்டித்து கொள்ளலாம். சமூகத்தோடு இணைந்து வாழத்தான் மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவேஇ நம் மன ஆரோக்கியத்திற்காகவும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் அடுத்தவர்களோடு நல்ல நட்புறவை பேண வேண்டியது அவசியமாகும்.

சிறு தூக்கம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் :
மதிய நேரம் சற்று மந்தமாக இருந்தால், அரை மணி நேரம் தூங்கி எழுங்கள். நிச்சியம் இது உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சீரான தூகத்திற்கும் இதய நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. நிச்சயம் இது உங்கள் ஆயுளை நீட்டிக்கும். ஆகவே, மதிய வேளையில் குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் வரை தூங்குங்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்