மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனைக்கு எதிரான கண்டண பேரணி
சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிரான கண்டண பேரணி மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
மண்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருத்திச்சேனை மங்கையர் கொத்தணியின் ஏற்பாட்டில் குறித்த கண்டண பேரணி இடம்பெற்றது.
குறித்த கண்டன பேரணியானது பருத்திச்சேனை பிரதேசத்தில் ஆரம்பமாகி வவுணதீவு பிரதேச செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, விஷேட அதிரடி படை பொறுப்பதிகாரிகளிடம் மனு கையளிப்போடு நிறைவு பெற்றது.
இதன்போது பருத்திச்சேனை பொது மக்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், சுய உதவிக்குழுக்களின் அங்கத்தவர்கள், இளைஞர் யுவதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்