வைத்தியசாலையில் மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ. றஜீவன் ஆகியோர் நேற்றையதினம் வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து நாட்டின் கொடை மற்றும் மென் கடன் மூலம் ரூபா 5000 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்டு அதனை முழுமையாக இயங்கச்செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டது.

மேலும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கத் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் ஆளணி எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளர்,பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்