போதையில் வீதியில் புரண்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி
நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று முன் தினம் சனி கிழமை நள்ளிரவு மது போதையில் போக்குவர்த்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில் அதிகாரி தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு நடுவீதியில் புரண்டு கொண்டிருப்பது போல் பதிவாகியுள்ளது.
மேலும், இவரின் இந்த செயற்பாட்டால் வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்