போதையில் இருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்
லண்டன் – பிரிட்டன் நாட்டின் கார்டிப் பகுதியில் வசித்து வந்த இந்திய மாணவர் பிரீத் விகல், கடந்தாண்டு ஜூன் 3ம் தேதி அன்று இரவு அருகே உள்ள உல்லாசவிடுதி சென்றுள்ளார். அப்போது ஒரு இளம்பெண்ணும் தனது நண்பர்களுடன் இரவு விருந்துக்காக உல்லாசவிடுதிக்கு வந்துள்ளார்.
அங்கு அவர்கள் மது போதை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கொண்டாட்டம் முடிந்த நிலையில், வெளியே வந்த அந்த இளம்பெண்ணுக்கு அதீத போதை காரணமாக நினைவு சரியாக இல்லை. அரை மயக்க நிலையில் பெண் தள்ளாடிக்கொண்டிருந்துள்ளார். பெண்ணின் நிலையை உணர்ந்து கொண்ட இந்திய மாணவர் பிரீத்இ அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.
அதிகாலை வேளையில் சாலையில் தனியாக தள்ளாடி நடந்து கொண்டிருந்த பெண்ணுக்கு அருகே சென்று அவருக்கு தோள் கொடுத்து உதவுவது போல சென்று அப்படியே அவரை தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வைத்து போதையில் நினைவற்று இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
விடிந்த பின் பெண்ணுக்கு நினைவு வந்த போது தான் வேறு ஒருவரின் படுக்கையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த பெண் உடனடியாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் படி பொலிசார் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். விசாரணையின் போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, பிரீத் போதையில் இருந்த இளம்பெண்ணை சாலையில் தூக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது. அத்துடன் இளம்பெண் தனது படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார் பிரீத். இது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிசிடிவி ஆதாரங்கள், பெண்ணிடம் பிரீத் இன்ஸ்டாகிராமில் மேற்கொண்ட உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் நிருபிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பின் தன்னால் 6 மாதத்திற்கு இரவில் வெளியே செல்லவே தைரியம் வரவில்லை என்று அந்த பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பெண்ணின் தைரியமான அனுகுமுறை தான் குற்றவாளியை பிடிக்க முக்கிய காரணம் என பொலிசார் விசாரணை குறித்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்