போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: பிணையில் வந்து போட்டியாளர்களை கொலை செய்கின்றனர்!
இலங்கையில் சமீபத்தில் பரவலாக இடம்பெற்றுள்ள துப்பாக்கிசூடுகளுக்கும் போதைப்பொருள் கடத்தலிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகங்களுடன் தொடர்புள்ளவர்களை அடையாளம் கண்டு கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு போட்டியாக உள்ளவர்களை பழிவாங்குவதற்காக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் அதனுடன் தொடர்புள்ளவர்களும் துப்பாக்கி பிரயோகங்களை திட்டமிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களில் சிலர் முன்னர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள், அத்துடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் வீதிக்கு வந்து தங்களின் போட்டியாளர்களை கொலைசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இவர்களை பிணையில் விடுதலை செய்வது தொடர்பான சட்டங்களை நாங்கள் இறுக்கமாக்கவேண்டும், அதனை செய்தால் அவர்கள் வீதிக்கு வந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைதடுக்கலாம், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்